சேலம் மாவட்டம் கோனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆண்டிக்கரை கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஒரு வார காலமாக மோட்டார் பழுதின் காரணமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது.
மேலும், அணையின் நீர் தேக்கப் பகுதியின் அருகில் வசிக்கும் அப்பகுதிமக்கள் தங்களுக்கு உடனே குடிநீர் வழங்க வேண்டும் என பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் மனு மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி வாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பஞ்சாயத்து அலுவலர் மற்றும் கருமலைக் கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.