கிரண் ராவின் ஊழியர்கள் 7 பேருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன்!

 

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பிரபல தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், பழமையான கோவில் சிலைகள், கல்தூண்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். இதனையடுத்து அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ரன்வீர் ஷாவின் நண்பரும் பெண் தொழிலதிபருமான கிரண் ராவ் இல்லத்தில் சோதனை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கலை நயமிக்க இரண்டு கல்தூண்கள் உள்பட 22 சிலைகளை பறிமுதல் செய்தனர். அவரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்தனர். இந்நிலையில் கிரண் ராவின் ஊழியர்களான 7 பேருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை கும்பகோணத்தில் உள்ள ஐஜி பொன்.மாணிக்கவேலின் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version