ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலும், பாதுகாப்பு படையினர் மீதான அத்துமீறிய தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், குப்வாரா மாவட்டத்தில், பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில்,
சரணடையாவிட்டால் சுட்டுக்கொல்லப்பட நேரும் என பாதுகாப்பு படையினரும், போலீசாரும், தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அல் பாதர் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 4 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். தப்பிச் சென்ற 3 தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.