வால்பாறையில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி இடம் பெயர்வது வழக்கம்.
இந்நிலையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வழக்கத்துக்கு மாறாக அங்கிருந்த வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் பொருட்டு 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.