காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் புதிய உற்சவர் சிலை உருவாக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் அந்தச் சிலை ஒப்படைக்கப்படுகிறது.
ஏகாம்பரநாதர் கோவிலில் பழைய உற்சவர் சிலை சிதிலம் அடைந்ததாகக் கூறி புதிய சிலை செய்ய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி, 2016ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட உற்சவர் மற்றும் அம்பாள் சிலையில், 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், பழைய உற்சவர் சிலை, புதிதாக செய்யப்பட்ட சிலைகளை நவீன கருவிகளுடன் பரிசோதித்ததில், அவற்றில் தங்கம் கிடையாது என்பது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக ஏகாம்பரநாதர் கோயில் இணை ஆணையர் கவிதா உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 2009ஆம் ஆண்டு பாம்பே ஸ்ரீதர் என்பவர் கோவிலுக்கு வழங்கிய உற்சவர் சிலை பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தச சிலை ஓரிரு நாட்களில் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது.