சென்னை நந்தனத்தில் வரும் 30ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் விழாவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், கேபி. அன்பழகன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு தேசிய தலைவர்களை அழைப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்றார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்குவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 7 பேரின் விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பதால், கூட்டணியை முறிக்க திமுக தயாரா என அவர் கேள்வி எழுப்பினார். மத்திய அரசு கலால் வரியை 50% குறைத்தால் அனைத்து மாநில மக்களும் பயனடைவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Discussion about this post