தங்கு கடல் மீன்பிடிப்பு சென்று கரை திரும்பாத தமிழக மீனவர்கள் 400 பேரை, விமானங்கள் மூலம் தேடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள், பல வாரம் தங்கியிருந்து மீன்பிடிப்பது வழக்கம். இந்தநிலையில், புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பினர். ஆனால், 42 படகுகளில் சென்ற 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியாமல் மீனவர்கள் பரிதவிப்பு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கடலோர காவல்படை விமானங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. விரைவில் அவர்கள் பத்திரமாக கரை சேருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.