சென்னை போரூரில் மங்களா நகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பில் மங்களா நகரின் அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், நீதிபதி டீகாராமன், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் உட்பட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மேடையில் பேசும்போது, 54 கேமராவை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பொருத்தும் நிகழ்வை தொடங்கி வைத்து இருக்கிறோம். காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே குற்றம் சம்பவங்கள் குறையும்.
சி.சி.டி.வி.காட்சி வைத்துதான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிகிறது சி.சி.டி.வி.கேமரா இருந்தால் குற்ற சம்பவமங்கள் உடனுக்குடன் கண்டுபிடித்துவிடலாம். ஒவ்வொரு வீட்டிலும் சி.சி.டி.வி. கேமராவை பொருந்த வேண்டும் என்றும் சென்னை மாநகரம் முழுவதும் சி.சி.டி.வி.கேமரா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது மேடையில் பேசிய நீதிபதி டீகாராமன், சிசிடிவி காட்சி எப்படி சிங்கப்பூரில் செயல்படுகிறதோ, அது போன்று நம் சென்னை பகுதியிலும் கொண்டு வந்துள்ளோம், பல பகுதிகளில் சிறப்பாக சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா செயல்பட்டு வருகிறது. இது போன்று பல பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் குற்றம் சம்பவங்கள் முழுமையாக குறைந்துவிடும் என்று கூறினார்.