2019ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஷ்டிக் பொருட்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை அமைச்சர் எம்.சி. சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கடலூரில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: எம்.சி. சம்பத்கடலூர்விழிப்புணர்வு பேரணி
Related Content
கொரோனா நோயாளிகள் குடிநீர் இன்றி தவிக்கும் அவலம்
By
Web Team
May 26, 2021
அதிமுகவினர் மீது திமுக கும்பல் கொலைவெறி தாக்குதல்
By
Web Team
May 23, 2021
உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர்... கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத்
By
Web Team
March 27, 2021
கடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!
By
Web Team
November 26, 2020
ஆன்லைனில் கேம் விளையாடியதை பெற்றோர்: தற்கொலை செய்துகொண்ட சிறுவன்
By
Web Team
November 20, 2020