உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர்… கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான கடலூர் தொகுதியில், துறைமுகம், மேலக்குப்பம், நல்லாத்தூர், தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம், அழகியநத்தம் உட்பட பல்வேறு பகுதிகள் இடம்பெற்றுள்ளன. வங்க கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த தொகுதி, முன்னொரு காலத்தில் கப்பல் போக்குவரத்தால் வணிகத்தில் கொடிகட்டி பறந்தது குறிப்பிடத்தக்கது. மீன்பிடித் தொழிலும் விவசாயமும் இத்தொகுதியின் முக்கியமான தொழில்களாக காணப்படுகின்றன.

கடலூர் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 2 லட்சத்து 38 ஆயிரத்து 364 என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 616 ஆகவும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 701 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 47 ஆகவும் காணப்படுகிறது.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் 85 ஆயிரத்து 953 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை 33 ஆயிரத்து 678 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திமுக வேட்பாளர் புகழேந்தி 52 ஆயிரத்து 275 வாக்குகள் பெற்றார்.

அதனையடுத்து நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கிய எம்.சி.சம்பத், 70 ஆயிரத்து 922 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட புகழேந்தி 46 ஆயிரத்து 509 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி வேட்பாளராக மத்திய மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கோ.ஐய்யப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சியின் ஆனந்தராஜ், நாம் தமிழர் சார்பில் ஜலதீபன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நொடி முதல், வாக்கு சேகரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத். அந்த பரபரப்புக்கு இடையே அவர், நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியின், உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர் நிகழ்ச்சிக்கு அளித்த சிறுபேட்டி இதோ…

கடந்த 10 ஆண்டுகளில் கடலூர் தொகுதியில் தான் செய்த சாதனைகளை குறிப்பிட்டு பேசிய அவர், வரும் தேர்தலில் வெற்றி பெற்று, மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன் எனவும் உறுதியளித்தார்.

கடலூர் நகராட்சிப் பகுதிகளில் புறவழிச் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும், அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் வாக்குறுதி அளித்தார். மேலும், கடலூர் தொகுதியில் தொழிற்துறை வளர்ச்சிக்காக மேற்கொள்ளவுள்ள பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்துவேன் என அவர் தெரிவித்தார்.

தேர்தல் வந்தா மட்டும் திமுக வேல் பிடிக்கும்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளாசல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட,120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகள், தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், 42 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணிகள்,18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மகப்பேறு மருத்துவமனை, கெடிலம் ஆற்றின் கரையோரம் ஒரு கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும், திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் 50 லட்சம் ரூபாய் செலவிலும் என, இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு கிடைத்துள்ளன. இதன்மூலம் பயனடைந்துள்ள தொகுதி மக்கள், மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வர வேண்டும் என வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் கடலூர் தொகுதியின் கலங்கரை விளக்கமாக திகழ்வதால், அவரது வெற்றி தற்போதே உறுதியாகியுள்ளது.

Exit mobile version