கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவிற்கு அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த வாரத்த்தில் மட்டும் 5.14 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளியன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் 32 காசுகளாக உள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 சதம் குறைந்துள்ளது. இந்நிலையில் வாரத்திற்கு வாரம் அந்நிய செலாவணி கையிருப்பு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் அந்நிய செலாவணி கையிருப்பு 5.14 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவான 394 பில்லியின் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பே அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.