ஜி சாட்-31 செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சிறிது தூரம் உயர்த்தி அதற்கான இடத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி அதிகாலை பிரன்சு கயான விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏரியான் ராக்கெட்டில் புறப்பட்டு அதற்கான சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
செயற்கைக்கோளில் உள்ள இஞ்சினை இயக்குவதன் மூலம் அங்கிருந்து அதனை நகர்த்தி பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தற்போது ஜி சாட் செயற்கைக்கோளை இஸ்ரோ நிலை நிறுத்தியுள்ளது. விரைவில் அடுத்த ஓரிரு நாட்களில் ஜிசாட்-31 செயற்கைக்கோள் தகவல்களை அனுப்பத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.