ஒரே மாணவியை காதலித்த இரண்டு நண்பர்களுக்கு நேர்ந்த கதி.

 

ஐதராபாத்தில் ஒரே மாணவியை காதலித்த இரண்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் தீவைத்துக்கொண்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் நகரில் உள்ள தனியார் பள்ளியில் மகேந்தர் மற்றும் ரவி என்ற மாணவர்கள் 11-ம் வகுப்பு படித்து வந்தனர். அதே வகுப்பில் படித்து வந்த ஒரு மானவியை இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் தீக்காயத்துடன் மரணம் அடைந்துள்ளனர். விசாரனையில்
இரண்டு பேரும் மது அருந்தி விட்டு அந்த பெண்ணுக்காக சண்டையிட்டுள்ளனர்.அப்போது அந்த பெண்ணிற்காக பெட்ரோல் ஊற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டுள்ளனர்.

இதில் மகேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ரவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணையில் உள்ள போலீஸார் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நண்பர்களான இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதை உணர்ந்து வருத்தப்பட்டதாகவும் அதனால் தான் அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தார்கள் என்றும் உள்ளூர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version