ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடாளுமன்றத்துக்கும், சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இதனால், செலவும், கால விரயமும் தவிர்க்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார். மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேசிய சட்ட ஆணையமும் பரிந்துரைத்துள்ளது. இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், சட்ட கட்டமைப்புகளை சரி செய்யாமல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Exit mobile version