ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடாளுமன்றத்துக்கும், சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இதனால், செலவும், கால விரயமும் தவிர்க்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார். மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேசிய சட்ட ஆணையமும் பரிந்துரைத்துள்ளது. இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், சட்ட கட்டமைப்புகளை சரி செய்யாமல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: ஓ.பி.ராவத்தலைமை தேர்தல் ஆணையர்
Related Content
சமூக ஊடக நிறுவன அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
By
Web Team
March 19, 2019
சமூக வலைதள நிர்வாகிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை
By
Web Team
March 18, 2019
இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படாது
By
Web Team
January 24, 2019
தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க பணமதிப்பிழப்பு உதவவில்லை - ஓ.பி.ராவத்
By
Web Team
December 3, 2018
மதத்தின் பெயரைக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை
By
Web Team
November 24, 2018