ஆதார் சட்டத்தை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யாமல் மக்களவையில் நிதி மசோதாவாக நிறைவேற்றி இருப்பது அரசியலமைப்புச் சட்ட மோசடி, என்றும் ஆதார் சட்டத்தை ரத்து செய்யவும் முகாந்திரம் இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.ஒய். சந்திரசூட் ஆதார் வழக்கில் தன் தீர்ப்பாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில், பாஜக மற்றும் மோடியை எதிர்த்து எங்களது தரவுகளை திரும்ப தாருங்கள் மோடி என்பதை குறிக்கும் வகையில் #ModiGiveBackMyData என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு நெட்டிசன்கள் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தெரிய வருவது என்னவென்றால்… தொடர்ந்து நமது தனிப்பட்ட விவரங்களை மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருவது தெரிய வந்துள்ளது. நமது அனைத்து தரவுகளும் தொடர்ந்து அவர்களிடம்தான் இருக்கப் போகிறது.. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுக்கு எங்களுடைய தனிப்பட்ட தரவுகள் திரும்ப கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார் ஹசிபா என்பவர்.
அரசு மக்களின் தரவுகளைப் பாதுகாப்பதைப் பற்றி என்ன செய்ய போகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்கிறார் ஒருவர்..
லட்சகணக்கான மக்களின் தரவுகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு அளவிட முடியாத அளவில் தீங்கு ஏற்பட்டுள்ளது என்கிறார் ஒருவர்..
நீங்கள் பணமதிப்பிழக்கத்தின் மூலம் எனது பணத்தை திருடினீர்கள்..
ஸ்வச் பாரத் மூலம் எனது பணத்தை திருடினீர்கள்..
பெட்ரோல் விலை உயர்வின் மூலம் பணத்தை திருடினீர்கள்…
ஜிஎஸ்டி மூலம் எனது பணத்தை திருடினீர்கள்…
குறைந்தபட்சம் எனது தனிப்பட்ட தரவுகளையாவது எனக்கு திரும்ப தாருங்கள்.. என்கிறார் கீத் என்பவர்.
இது போன்ற கமெண்டுகளால் பிரதமர் மோடியை இணைய வாசிகள் அதிர வைத்துள்ளனர்.
Discussion about this post