சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ”ஆக்சன் ஏய்டு” என்ற தொண்டு நிறுவனம், வறுமை ஒழிப்பு, கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பணியை செய்து வருகிறது.
இந்த நிலையில், 60 நாட்களுக்குள் தங்கள் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு நோட்டீஸ் விடுத்துள்ளதாக ஆக்சன் ஏய்டு தெரிவித்துள்ளது. இது சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று ஆக்சன் ஏய்டு நிறுவனம் விமர்சித்துள்ளது. ஆனால் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த அமைப்பைப் போல, மேலும் 17 தொண்டு நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.