மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சிறுவயதில் இருந்தே தன்னுடைய தனித்தன்மையான ஆட்டத்தினால், தனக்கென்று உலகளவில் தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது கிரிக்கெட்டில் துளிர்விடும் நாயகனாக வலம்வந்துகொண்டிருக்கின்றார்.அதற்க்கு எடுத்துக்காட்டாக 19 வயதுக்கு உட்பட்ட வினூ மங்கட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரும் கூட. 19 வயதுக்கு உட்பட்ட வினூ மங்கட் டிராபி தொடரில் மும்பை அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கர் ஆடிவருகிறார். இதில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8.2 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஜூன் டெண்டுல்கர். 143 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் சிகரத்தின் மகன் என்ற பெயரோடு வளம் வரும் அர்ஜுன் டெண்டுகரின் இந்த அபார ஆட்டம், அவருக்கென நிச்சயம் கிரிக்கெட்டில் ஒரு இடத்தை ஏற்படுத்துவார் என்றே கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகிறார்கள்.