எச்.ராஜாவுடன் சேர்ந்து உயர்நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரத்தில் 5 பேர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தபோது, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசினார். அப்போது, எச்.ராஜாவுக்கு ஆதரவாகவும், போலீசாருக்கு எதிராகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் மீது போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் மெய்யபுரம் வைத்தியலிங்கம், சொக்கலிங்கம், பெருமாள், ராதாகிருஷ்ணன் மற்றும் அய்யனார்புரத்தை சேர்ந்த ரத்தினம் ஆகிய 5 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.