தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! என்ன திடீர்னு?

தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிற்கு  சென்னை உயர் நீதிமன்றமானது ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. அதாவது பாலியன் வன்கொடுமை வழக்குகளின் இருவிரல் சோதனையானது தவிர்க்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

இருவிரல் சோதனையை தவிர்க்க வேண்டும்..!

18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான உறவு தொடர்பான விவகாரத்தை கையாள்வது குறித்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் அமர்வானது முக்கியமான இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென தமிழ்நாடு டிஜிபிக்கு இந்த உத்தரவினை நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள். சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை விளக்கத்தை ஏற்று வழக்கினை முடித்து வைத்தனர் நீதிபதிகள். அதனைத் தொடர்ந்து, தர்மபுரியில் இளவயது திருமணம் தொடர்பான வழக்கில் 17 வயதுக்குட்ப்பட்ட இருவரையும் காவல்துறையினர் நடத்திய விதத்தில் நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும்இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும்பட்சத்தில், இருவரையும் குழந்தைகளாக கருத வேண்டும் என்று தனது உத்தரவினைப் பிறப்பித்துள்ளனர்.

Exit mobile version