விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள ‘96’படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘96’ படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், சின்மயி, பாடலாசிரியர் உமாதேவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி, ஒரு தயாரிப்பாளர் சந்திக்கும் பிரச்சினைகளை அதிகம் பகிர்ந்து கொண்டார்.
ஒரு படத்தின் கதையைக் கேட்டு தயாரித்து வெளியே கொண்டுவருவது எவ்வளவு உயிர் போகிற விஷயமோ, அதை விடப் பல மடங்கு வேதனை படம் வெளியாவது. அப்புறம் படத்தின் வசூலைத் தெரிந்து கொள்வது. ஊரே ஹிட் என்று சொல்லும் போது, படத்தின் வசூலைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும். நீங்கள் பேசுவது ஒன்றாக இருக்கும், எங்களுக்கு வருவது ஒன்றாக இருக்கும். இங்கு சிஸ்டத்திலேயே பிரச்சினை இருக்கிறது. ஒருத்தரை ஒருத்தர் கையைக் கோத்துக்கொண்டு நிற்கிறார்கள்.
தீர்வு இல்லாத பிரச்சினையை வெளியே பேசி என்னவாகப் போகிறது எனவும் விஜய் சேதுபதி சலித்துக்கொண்டார்