த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கின் புது பெயர் இதுவா..கேட்ட சந்தோஷபடுவீங்க

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களை வரிசையாக கொடுத்தாலும் 2018 ஆம் ஆண்டு வெளியான ’96’ திரைப்படம் த்ரிஷாவின் திரையுலக பயணத்தில் மைல் கல்லாக அமைந்துள்ளது.இந்த படத்திற்காக மட்டும் 11 விருதுகளை த்ரிஷா இந்த ஆண்டு பெற்றுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் த்ரிஷாவும் ஒருவர்.இவர் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயர் dudette583, ட்விட்டர் கணக்கு TrishKrish என்ற பெயரில் இருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் ’96’ படத்தில் ஜானுவிற்கு காட்டிய அன்பின் அடையாளமாக, TrishaJaanu என்று தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.மேலும் 2019 ஆம் ஆண்டு அவர் வாங்கிய விருதுகளை கட்டி அனைத்துப்படி புகைப்படம் பதிவிட்டு’உங்கள் அன்பிற்கு நன்றி ‘ என்றும் கூறியுள்ளார்.

 

Exit mobile version