இந்த ஆண்டின் கடைசி விருது : த்ரிஷா இன்ஸ்டா பதிவு

இளைஞர்களின் கனவு கன்னியான த்ரிஷா, 96 படத்தை தொடர்ந்து ரஜினியுடன் ’பேட்ட’ திரைப்படத்தில் நடித்தார்.பின்பு பரமபதம் விளையாட்டு, ராங்கி ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளார்.

இந்த ஆண்டு த்ரிஷா -விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ’96’ திரைப்படம் பல விருதுகளை பெற்றது.விருதுகள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படங்களின் வரிசையிலும் இடம் பிடித்தது.இந்நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘96 படத்திற்காக filmfare விருதினை பெற்றிருப்பதாக கூறி, இந்த ஆண்டின் கடைசி விருது’ என பதிவிட்டுள்ளார்.

மேலும்,த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version