உலகத் தமிழறிஞர்கள் ஆய்வு மாநாடு கன்னியாகுமரியில் நாளை துவங்க இருக்கிறது.
இரு நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகவும், கேரள ஆளுநர் சதாசிவம் கலந்துகொள்ள இருப்பதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், குமரி – லெமூரியா உலக தமிழ் ஆய்வு மையத்தின் சார்பில் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த உலகத் தமிழறிஞர்கள் பங்குபெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.