73 ஆவது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றவுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி

73 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி பல்வேறு விருதுகளை வழங்குகிறார்

73 சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், 120 அடி உயர கொடிக் கம்பம், வர்ணம் பூசப்பட்டு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்கிறார். இதனையடுத்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு விருது, வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, சிறந்த மாற்றுத் திறனாளிக்கான விருது உட்பட, 22 விருதுகளை முதலமைச்சர் வழங்கி கவுரவிக்கிறார். சுதந்திர தின விழாவையொட்டி, 448 கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

Exit mobile version