தமிழக பாஜக தலைவர் முதலமைச்சர் பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன், முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை, முகாம் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது, அதிமுக கூட்டணியுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம், வருங்காலத்திலும் அதே கூட்டணியில் சிறப்பாக பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

Exit mobile version