இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் எம்.ஜி.ஆர் – அமைச்சர் செல்லூர் ராஜூ

இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் துணை போன திமுக- காங்கிரஸ் கட்சிகளின் துரோகச் செயலை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றதை நினைவு கூர்ந்தார். மேலும், ஈழத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் அம்மா ஜெயலலிதா என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என உண்ணாவிரதம் இருந்து அனைவரையும் ஏமாற்றியவர் கருணாநிதி என்றும் குற்றம்சாட்டினார். குறிப்பாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுக எவ்வளவு லாபம் சம்பாதித்தது என்பது ஊருக்கே தெரியும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி, கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள், பகுதி, வட்ட, ஊராட்சி, கிளை கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version