இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை 2-வது அரை இறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி 2 -1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. 2-வது அரை இறுதி போட்டியில், இங்கிலாந்து – குரோஷியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்தில், இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர், அபாரமாக ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால், போட்டியின் முதல் பாதி வரை, இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.
2-வது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடி, 68-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினர். இதனால், ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது. இதனைத்தொடர்ந்து, கூடுதல் நேரத்தில், 109-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக், ஒரு கோல் அடித்தினார். இதனால், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, குரோஷியா அணி வெற்றிப்பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் தகுதிப் பெற்றது. இதன் மூலம், உலக கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதி போட்டியில், குரோஷியா அணி முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளது.