இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ தடை விதிக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவ்வாறு தடை விதித்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக கூறி சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களும் எதிர் மனு தாக்கல் செய்தனர்.

இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ தடையில்லை என தீர்ப்பு அளித்துள்ளது. அதேசமயம் அதிக சத்தம் மற்றும் அதிக புகையை ஏற்படுத்த கூடிய பட்டாசுகளை தயாரிக்க கூடாது, பட்டாசுகளை தயாரிக்க அதிகளவில் அலுமினியம் பயன்படுத்த கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

குறிப்பாக ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.

 

 

Exit mobile version