"இனி அதிகாரம் தமிழக அரசின் கையில்"

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 7 பேரின் விடுதலை பற்றி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மத்திய அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

Exit mobile version