இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுலவேசி (sulawesi) தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்ததாகவும், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சுலவேசி தீவுப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post