இந்தோனேசியாவில் சுனாமிக்கு பிறகு 5 ஆயிரம் பேர் மாயம்

 

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலுக்கு பின்னர் இன்னமும் 5 ஆயிரம் பேரின் கதி தெரியாததால் உயிரிழப்பு கடுமையாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் கடந்த மாதம் 29-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை, சுனாமி தாக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பெரும்பாலான வீடுகள், கடலோரத்தில் இருந்த பெரிய அளவிலான குடியிருப்புகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாகியுள்ளன. உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. இதுவரையில் 1763 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே சுனாமியில் உயிரிழந்தவர்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனாமிக்கு பிறகு
சுமார் 5 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்புத்துறை செய்தி தொடர்பாளர் சுட்டோப்போ புர்வோ நுக்ரோஹோ அறிவித்துள்ளார். இவர்களை குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் சுனாமி தாக்கியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Exit mobile version