இந்திய ரூபாய் மதிப்பு சில வளரும் நாடுகளைக் காட்டிலும் மோசமாகவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த , உர்ஜித் படேல், கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும் என எச்சரித்தார்.
உள்நாட்டு பொருளாதார அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இந்திய ரூபாய் மதிப்பு சில வளரும் நாடுகளை காட்டிலும் மோசமாகவில்லை என்றார்.
இதுபோன்ற நிலையற்ற சூழல் நிலவும்போது ரிசர்வ் வங்கியின் வேலை அபரிமிதமான ஏற்ற இறக்கங்கள் ஏற்படாமல் பார்த்துகொள்வதுதான் என உர்ஜித் படேல் கூறினார்.