இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்

 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை தரவுள்ளார்.

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இதனால் இந்தியா, ரஷ்யா இடையேயான நட்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

ரஷ்யாவுடனான நட்பை இந்தியா கைவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை, நட்பு தொடரும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version