சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஆனால் இதற்கு முன்பு சீன பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ரஷியாவிடம் இருந்து சுகோய் ரக போர் விமானங்களையும், எஸ்-400 ரக ஏவுகணைகளையும் கொள்முதல் செய்த விவகாரத்தில், அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதேபோன்று, இந்தியா மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்தியா மீது எந்த பொருளாதார தடையும் விதிக்கப்படாது என்று அமெரிக்கா உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.