இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ரஹ்மோன் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்திய குடியரசு தலைவர் ராம் நாத்கோவிந்த் மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தஜிகிஸ்தான் தலைநகர் டுசான்பே சென்றடைந்த அவரை அந்நாட்டு அதிபர் எமோமலி ரஹ்மோன் வரவேற்றார். இதையடுத்து நடைபெற்ற சந்திப்பின் போது எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் பேரிடர் வேளண்மை தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் இந்த பயணம் இரு நாடுகளில் உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.