டோக்லாம் பிரச்சனையால் தடைப்பட்டிருந்த இந்திய-சீன கூட்டு ராணுவ பயிற்சி வரும் டிசம்பரில் மீண்டும் நடைபெற உள்ளது.
டோக்லாம் பிரச்சனையால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சீனாவுக்கு அரசுசாரா பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். இதன் பிறகு இந்திய-சீன உறவு சீரடைய துவங்கியுள்ளது.
இந்தநிலையில் வரும் டிசம்பரில் மீண்டும் இந்தியா, சீனா இடையேயான ராணுவ கூட்டு பயிற்சி சீனாவின் செங்டுவில் நடைபெற இருக்கிறது. இதில் 48 அதிகாரிகள் மற்றும் 100 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆசியாவில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் இருபெரும் நாடுகள் மீண்டும் ராணுவ கூட்டு பயிற்சியை மேற்கொள்ள இருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.