இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு – ஆய்வறிக்கையை காட்டி ராகுல் காட்டம்

பிரதமர் மோடியின் திட்டங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்புகளை கொன்று வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.இந்தியாவின் வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழத்தின் வேலைவாய்ப்பு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 82 சதவீதம் ஆண்களும், 92 சதவீதம் பெண்களும் மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஜிடிபி.,யால் வேலைவாய்ப்பு உயரவில்லை என்பதும் ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்களாக உள்ளது.

இதனை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், பிரதமரின் திட்டங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்புகளை கொன்று வருகிறது என அவர் விமர்சித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு, திறமையில்லாதவர்களிடம் போர் விமானம் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் திறமையுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். 

Exit mobile version