இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் சந்தீப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட சந்தீப் சவுத்ரி 60 புள்ளி 1 மீட்டர் தூரத்திற்கு எறிந்து தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இதுவரை இந்திய அணி ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.