'இந்தியன் 2' படத்தில் மீண்டும் இணைந்த அதே முக்கிய நடிகர்

லைகா நிறுவனம் தயாரிப்பில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தில் நெடுமுடி வேணு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே இவர் இந்தியன் முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இசையமைப்பாளராக அனிருத் இருப்பார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படம் கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து 22 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

 

Exit mobile version