ஆந்திராவில் முழு அடைப்பு / இயல்பு வாழ்க்கை முடங்கியது

 

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக பாஜக தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆந்திர மக்களை பாஜக அரசு ஏமாற்றிவிட்டதாகவும் தெலுங்க தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் குற்றம்சாட்டினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அழைப்பின்பேரில், ஆந்திரம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பகுதிகளில் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். சித்தூர் மாவட்டத்தில் 144 தடையை மீறி, மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பதி காவல்நிலையம் எதிரில் மறியலில் ஈடுபட முயன்றவர்களையும் போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version