ஆந்திராவில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.55 லட்சம் நிதியுதவி: ஜப்பான் தூதரகம் வழங்கியது

ஆந்திராவில் கிராமபுற சுகாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ஜப்பான் தூதரகம் 55 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் சார்பில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கிராமப்புற சுகாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சுகாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில், மருத்துவ உபகரணங்கள் வாங்க, 55 லட்ச ரூபாயை ஜப்பான் தூதரகம் வழங்கியது. இதற்கான காசோலையை ஜப்பான் தூதரக அதிகாரி கொஜிலோ உச்சியாமா, அந்தபூர் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் திப்பு சாமியிடம் வழங்கினார்.

Exit mobile version