ஆதார் சட்டத்தின், 57 வது பிரிவை உச்ச நீதிமன்றம், நீக்கியதற்கு காங்கிரஸ் ,திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஆதார் அட்டை எங்கு கட்டாயம் , எங்கு கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தலைமை அமர்வு இன்று தீர்ப்பளித்தது.அதன்படி அரசியல்சாசனச் சட்டப்படி, ஆதார் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கார்டு அவசியம் ஆதார் கார்டு இல்லை என்பதற்காக சலுகைகளை மறுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார் சட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சட்டப்பிரிவு 57-யை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ளார்.
ஆதார் சட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு தனிநபர்களின் ஆதார் விவரங்களை அளிக்கும் 57-வது பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்புக்குரியது என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் ஆதார் சட்டம் எவ்வாறு இருந்ததோ அதைவர வேற்ற நீதிமன்றம், மோடி அரசு சேர்த்து வைத்திருந்த அழுக்கு நீரைக் கீழே ஊற்றி ஆதார் குழந்தையை பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே போல ,ஆதார் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை திரிணாமுல் காங்கிரஸ்கட்சியும் வரவேற்றுள்ளது. ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததே வரவேற்கிறோம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
Discussion about this post