ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தில் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான பணிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டதாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்தார்.
இது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த , மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , ரஃபேல் போர்விமானம் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.