அ.இ.அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், அ.இ.அ.தி.மு.க. கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்த P.K. வைரமுத்து, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர் வகித்து வரும் புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.இ.அ.தி.மு.க. கூடுதல் நிர்வாகிகள், கழகத்தின் சார்பு அமைப்புகளுக்கான துணை நிர்வாகிகள், புதிதாக உருவாக்கப்பட்ட வர்த்தக அணி, கலைப் பிரிவு ஆகியவற்றுக்கான நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கழக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் ப.மோகன், ஆர்.முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., என்.சின்னதுரை, மத்திய முன்னாள் இணை அமைச்சர் செஞ்சி ந.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.பரஞ்ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, முன்னாள் எம்.பி., பு.தா.இளங்கோவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயப் பிரிவுத் தலைவராக டி.ஆர்.அன்பழகன், விவசாயப் பிரிவு செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விவசாயப் பிரிவு இணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக வர்த்தக அணித் தலைவராக அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ., வர்த்தக அணிச் செயலாளராக சிந்து கே.ரவிச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலைப் பிரிவுத் தலைவராக திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான், கலைப் பிரிவு செயலாளராக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கலைப் பிரிவு இணைச் செயலாளராக இயக்குநர், நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழக செய்தித் தொடர்பாளர்களாக நிர்மலா பெரியசாமி மற்றும் திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக ஆ.இளவரசன் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் வி.மூர்த்தி, டி.கே.எம்.சின்னையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்களாக எம்.கே.செல்வராஜ், தோப்பு க.அசோகன், பொருளாளராக முன்னாள் அமைச்சர் வரகூர் ஆ.அருணாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புரட்சித்தலைவி அம்மா பேரவையின் இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பூங்காநகர் கு.சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்களாக அ.சுப்புரத்தினம், எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.,வும், துணைச் செயலாளராக தி.க.அமுல்கந்தசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் அணி துணைச் செயலாளராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்களாக கா.லியாகத் அலிகான், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரகீம், முன்னாள் அமைச்சர் முகம்மதுஜான், அ.அப்துல்ஜப்பார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக வி.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய நிர்வாகிகளுக்கு கழகத் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.