அ.இ.அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் – தலைமைக் கழகம் அறிவிப்பு

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கட்சியின் சட்ட ஆலோசகராக டாக்டர் பி.ஹெச்.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக முன்னாள் எம்.பி., காஞ்சி பன்னீர்செல்வம் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version