ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியில்,
7 பேர் விடுதலை விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார். ராஜீவ் கொலை வழக்கில் கைதானோரின் விடுதலை விவகாரம் நீதி சம்பந்தமானது என்றும் , காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்த போது 7 பேரையும் விடுக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post