சீனாவின் எல்லைப்பகுதி அருகே அமைந்துள்ள கிராமம் ஒன்றில், நிலச்சரிவு காரணமாக உருவான செயற்கை ஏரியில், 131 அடி உயரத்தை தாண்டி தண்ணீரின் அளவு உயர்ந்து வருவதால், அருணாச்சல பிரதேசத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மென்லிங் பகுதியில் அமைந்துள்ளது, யார்லங் சாங்போ நதி. இது, திபெத் வழியாக இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழையும் போது, சியாங் நதி என்று அழைக்கப்படும். தற்போது, யார்லங் சாங்போவில் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மிகப் பெரிய செயற்கை ஏரி உருவாகி, அதில், 131 அடியை தாண்டி தண்ணீர் உயர்ந்து வருகிறது. இதனால் அருணாச்சல பிரதேசத்தின் டூ டிங் என்ற கிராமத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.