அரசு சேவைகளை பெற வீடுகளுக்கு க்யூஆர் கோடு வழங்கும் திட்டம்! – ஆந்திராவில் அறிமுகம்

அரசு சேவைகளை பெற வீடுகளுக்கு க்யூஆர் கோடு வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதியில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். அதன்படி, திருப்பதி மாநகராட்சியில் ஒவ்வொரு வீட்டிற்கும் 9 இலக்க எண்ணுடன் கூடிய க்யூஆர் கோடு வழங்கப்படும்.

ஒன்பது இலக்க எண்ணில் முதல் மூன்று எண்கள் வீடு அமைந்துள்ள பகுதியையும், அடுத்த மூன்று இலக்க எண் வீடு அமைந்துள்ள தெருவையும், கடைசி 3 இலக்க எண் வீட்டின் முகவரியையும் குறிப்பிடும்.

க்யூஆர் கோடை அரசின் சேவா மொபைல் செயலியில் ஸ்கேன் செய்து, பிரச்சினைகள் குறித்து வீட்டின் உரிமையாளர் புகார் அளிக்கலாம். அதன் அடிப்படையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Exit mobile version