அரசு சேவைகளை பெற வீடுகளுக்கு க்யூஆர் கோடு வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதியில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். அதன்படி, திருப்பதி மாநகராட்சியில் ஒவ்வொரு வீட்டிற்கும் 9 இலக்க எண்ணுடன் கூடிய க்யூஆர் கோடு வழங்கப்படும்.
ஒன்பது இலக்க எண்ணில் முதல் மூன்று எண்கள் வீடு அமைந்துள்ள பகுதியையும், அடுத்த மூன்று இலக்க எண் வீடு அமைந்துள்ள தெருவையும், கடைசி 3 இலக்க எண் வீட்டின் முகவரியையும் குறிப்பிடும்.
க்யூஆர் கோடை அரசின் சேவா மொபைல் செயலியில் ஸ்கேன் செய்து, பிரச்சினைகள் குறித்து வீட்டின் உரிமையாளர் புகார் அளிக்கலாம். அதன் அடிப்படையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி மாநகராட்சி தெரிவித்துள்ளது.